எண்ணற்ற உறவுகளின்
உள்ளங்களை ஊனப்படுத்தி
நிம்மதியை நிர்க்கதியாக்கி
மக்கள் மனங்களிலே
மங்காமல் நிலைத்துவிட்ட
சுனாமியின் வடுவினை
எண்ணி
வருந்துவதை விட
வையத்து மானிடரே .....
மாண்டவர் போகட்டும்
வாழ்பவர் வாழ்ந்திட
ஒன்றாய் இணைந்து
பிரார்த்திப்போம்......
வாழும் உள்ளங்கள்
அமைதி கொள்ள
மீண்டும் ஒரு சுனாமி
வராதிருக்க......


