Sunday, May 26, 2013
Thursday, May 23, 2013
எறும்பு
கூட்டம் கூட்டமாய் வசிக்கிறாய்
கூடி ஒன்றாய் திரிகிறாய்
கரும்பைக்கண்டால் சிரிக்கிறாய்
இனிப்பை நீயும் சுவைக்கிறாய்......
நீண்ட துர்ரம் செல்கிறாய்
நீதமாய் இயங்குகிறாய்
உழைப்பில் சலிப்பே இல்லாமல்
உலகில் வெற்றியடைகிறாய்...
சமூகப்பிராணி நீயுமே
சமயோகிதமாய்
சேமிக்கும் சேமிப்பினை
சரியாய் -இங்கே
படிப்பினையாய் காட்டுகிறாய் .....
எறும்பைப்போல நாமுமே
உழைப்பில் உயர்ந்து
வாழ்வில் உயர்வோமே........
Subscribe to:
Posts (Atom)



