Pages

Subscribe:

Tuesday, December 25, 2012

சுனாமி

        
                                                                          

               எண்ணற்ற உறவுகளின்
               உள்ளங்களை  ஊனப்படுத்தி
               நிம்மதியை நிர்க்கதியாக்கி

               மக்கள்   மனங்களிலே
              மங்காமல் நிலைத்துவிட்ட
              சுனாமியின் வடுவினை
              எண்ணி
              வருந்துவதை விட
              வையத்து மானிடரே  .....


                             மாண்டவர் போகட்டும்
                             வாழ்பவர் வாழ்ந்திட
                             ஒன்றாய் இணைந்து
                             பிரார்த்திப்போம்......


                             வாழும் உள்ளங்கள்
                             அமைதி       கொள்ள
                             மீண்டும்   ஒரு சுனாமி
                             வராதிருக்க......  

Saturday, December 8, 2012

மீண்டும் வாழ்வதற்காக

பாவமறியாத பாலகனோ
பரிதாபத்துடன்
தெருவோரத்தில்
மளைத்து நிற்கிறான்
உறவினை இழந்து...

கிராமத்தின் பசுமையில்
தேன்கூடாய் இருந்த
குடிசையில்
மின்னல் மழையாய்
விழுந்த ஷெல்களில்
கருகிப் போன
உயிர்களைக் கண்டு
கணத்துப்போன இதயம்
துடிக்கிறது....

துன்பக்கடலில்
கரை சேர முடியாமல்
ஏங்குகிறது...
யுத்தத்தில் இழந்த
உறவுகளை எண்ணி...

விழித்தெழு

சமத்தவம்    குறைந்து
சமநீதி            பிழைத்து
சகோதரத்துவம் தொலைந்து
சமயம்   தலைத்துர்க்க
சமர் ஓங்கி நிற்கிறது.....



யுத்த பூமியில்
நித்தம் தொடர்கையில்
மொத்தமாய்  சூழ
சொந்த மண்ணை துறந்து
சோகமாய் மக்கள் தம் 
சொந்தங்களை  இழந்து
சொத்துக்களை விட்டு
அடிமைக்கோலம் பூண்டு
அவனியில் கால்பதித்ததாலா?
அமைதி ஏங்கி தவிக்கிறது....



அன்பு .கருணை.அஹிம்சை.
அறக்குணங்கள் மறைந்து
அழிவுப்பாதையை நோக்கி
நகர்கையில்
அடாவடித்தனம் வன்முறை
ஆக்கிரமிப்பு தலைத்துர்க்க-அன்று
சுதந்திரக்காற்றை சுவாசித்த
எம்சோதர்  -இப்போ
கைகட்டி வாய்பொத்தி
நிற்கும் நிலை
எல்லை மீறி ஜெயிக்கின்றது...



மனிதா மனிதாபிமானம்
குறைந்ததாலா?
மனிதம்
இங்கே  வீழ்கிறது..
மனிதா விழித்தெழு
வீருகொண்டெழு
நாளைய தலைமுறையின்
விடிவுக்காய் - உன்னை  
சல்லடையாக்கிபோராடு  -இங்கே
அடிமைப்பட்ட எம்மவர்
வாழ்வினை மீட்டிட.....

Tuesday, November 20, 2012

தவிப்பு

பலலெட்ச      கனவுகலோடு
பல்லாயிரம் இலட்சியங்கலோடு
பாரினில்...
கொள்கை சமூகமாற்றம் -சீரிய
சிந்தனை அதிகாரபரவலாக்கலென
சந்தேங்களை தெளிவுபடுத்த
நம்பிக்கை விளித்துக்கொண்டது...

கட்டமிட்டு  செப்பனிட்ட
சமூக எழுச்சிகண்டு
திட்டமிட்ட சதியோ-இல்லை
வட்டமிட்ட விதியோ-என
எண்ண வைத்தது-தீடீர்
விபத்துடன் மறணம்.....

வாதித்து சாதித்து
வென்ற மனிதத்தை
 சோதிக்க  நினைத்து
 சோதனைக்குல் தள்ளி
 வேதாந்தம் பேசும்
பயங்கரவாத ஜனநாயகத்தின்
இனவாத ஆக்கிரமிப்பில்
தனிமைப்பட்ட இதயங்கள்
கணக்கிறது தேசத்தில் .....

பேரீனத்தின்  வீராப்பை
தைரியமாய் துணிச்சலுடன்
அறிவார்ந்த வாதத்தில்
முடக்கிய மாமனிதனின்
தலைமைத்துவ ஆளுமைச்சேவை
இன்றும்  இல்லாமல்
போனதால்....






















































































































































































 

Sunday, November 18, 2012

கூட்டுக்குடும்பம்

வாழ்க்கைப் பயணத்தில்
தொடர்ந்து வந்த
உறவுகளின்
பாசத்தினைக் கண்டு
புரிந்து கொண்டேன்....

ஒன்றாய் இணைந்து
விட்டுக்கொடுத்து
ஒற்றுமையாய் -கூடி
மகிழ்ந்து
வாழும்  வாழ்வே
பூலோக சுவர்க்கமென
அறிந்து கொண்டேன்....

Tuesday, November 13, 2012

ஒரு காலம் வரும்

ஆதிக்க வர்க்கத்தின்
ஆணவம்
மனித நேயத்தின்
வாயிலில்
தஞ்சமடையும்
ஒரு காலம் வரும்....


இரத்தம் சிந்தும்
கொடூரங்கள் இன்றி
மனித மனங்கள்
புன்னகை சாமரங்கள்
வீசும்.....

ஓரினம்-அது
மனித இனம்
ஒன்று படும்
ஒறே  இனம்-என்று
சொல்லும்
நாள்    வரும்
ஓரு நாள் வரும்.....

உறங்காத இரவுகள்

கண்களால் காயப்படும்
உணர்வுகளின் ஏக்கங்கள்
பேசப்படாத வார்த்தையாய்
மௌனத்தால்
உறைகையில் -நித்தமும்
அலைபாயும் மனதோ
ஆர்ப்பறிக்கும்
தனிமையின் தகிப்பில்...

Friday, October 26, 2012

ஹஜ் பெருநாள்

துல்ஹஜ் மாதத்தின்
துர்ய்மை பொறுந்திய
நாளாம்
பிறை பத்தில் !!




தியாகச்செம்மல்களின்
வரலாற்றை
குர்பானியாய் எடுத்தியம்பி
ஈமானிய நெஞ்சமதை
சுத்திகரித்து
சுவனத்தின் நற்பாக்கியம்
பெற்றுத்தந்து
இன்று பிறந்த  பாலகராய்
மாற்றியமைத்து !!

வேற்றுமையின்றி ஒற்றுமையாய்
இஸ்லாமிய உம்மத்தெனும்
முத்திரை பதித்து

இஸ்லாமிய உணர்வை
உலகிற்கு      உணர்த்தி
ஹாஜிகள் எனும்
நாமம் தந்து
ஈத்முபாரக் என்று
சொல்லி செல்றேன்.
நானும்
தக்கப்பலல்லாகு மின்ஹா வமின்கும்












ஏன் இன்னும்

கனவுப்  பூக்களாம்
கற்பனையில்
நாளும் நயந்து
நான்  பறிக்க
புன்னகை சிந்தும்
மலழைப் பூவே ,,,

உயிர் தந்து
உணர்வுகளால் உரமூட்ட
பகலிரவாய் எதிர்ப்பார்த்து
காத்திருக்கும்
எனக்குல் -கண்மணியே
ஏன் இன்னும் -நீயும்
வரவில்லை.....

காலம்கடந்த ஞானம்

அழகிய   வாழ்வின்
அர்த்தம் புரியாமல்
அநியாயமாய்
உறவுகளை விட்டு
ஒதுங்கி  வெறுமையாய்
வாழ்கையில்
உணர்கிறேன்
அன்பான உறவுகளின்
அருகாமையை....

நியாயமின்றி

மணக்க மணக்க
ருசித்து சுவைக்க
சிற்றுண்டியோ பலரகம்!!

சைவம்    என்றும்
அசைவம்என்றும்
பல வகையராக்கள் !!

சாப்பாட்டு மேசையல்
பரப்பி  வைத்த
உணவுப்பண்டமோ
கொட்டிக் கிடக்கும்
உணவுத்தட்டுகளில் !!

ஆனாலும்
தெருக்கோடியில் அமர்ந்து
ஒருவேளை உணவுக்கு
ஏங்கும்  இதயமோ
ஜயா      பிச்சை
அம்மா  பிச்சை -  என்று
கதறிக்கையேந்தி  நிற்க

அங்கே
திட்டி     அவரை
விரட்டி அடிக்க 
கைக்கொட்டி  சிரிக்கும்
மானிடமோ 
இம்மண்ணின் மேலே
உழவுகையில்  !!

உண்டு    களித்து
இன்பற்று செல்கையில்
பாதி   உண்டு
மீதி     கிடக்கும்
உணவுப்பண்டங்களை
கொட்டுகின்றனர்
குப்பைத் தொட்டியில்
மனசாட்சி இன்றி.....


Monday, October 22, 2012

திருமணம்

ஆண்மையின் வரட்சிப்பசிக்கு
தீனியாய்  நசுக்கி
பிளியப்படும்-இந்த
சீதனச்சாபம்
இருக்கும் வரை
ஏது இங்கு  மணம்

நன்றியுடன்

சேதப்பட்டு திருத்திய
அத்திபாரம் சிரிக்கிறது
நாதம் இல்லா வீணையாய்
துர்க்கியெறியப்பட இருந்த
வாழ்வை மறுபடியும்
செப்பனிட்டு  செளிப்பாக்கிய -அந்த
நல்லிதயத்தை நினைக்கையில்.....

முதிர்க்கன்னி

பெண்மை சுமந்துவந்த
செளந்தரியங்களை-நாளும்
அனுபவிக்க முடியாமல்
உணர்வுகளை புதைத்து
ஒதுங்கி நிற்கும்
ரகசிய கல்லறை இவள்....

Sunday, October 21, 2012

விலைவாசி உயர்வு

கண் விளித்து கஸ்டப்பட்டு
பெற்று வந்த
கூலியோ பேதாமல்
உன் ஏற்றத்தில்

எண்ணிலடங்கா ஏற்றத்தில்
சொல்லிலடங்கா வேதனைப்பட்டு
மிதிபட்டு மடிவது
ஏழை எம்மவர்
அறிவாயா?

உரிமைக்காக போராடிய
எம்மவர்-உன்
உயர்வைக் கண்டு
பேராடும் நிலையோ
இப்போது,,,

தெருவில் இறங்கி
ஆர்ப்பாட்டம் செய்தும்
பயனென்ன நமக்கு
விடியாத பொழுதாய்
விலைவாசி உயர்வு...

ஏழை வளிற்றை துளைத்து
இரத்தம் குடிக்கும்
யூகேமியாவாய்
மாறிவரும்...

பொது நலமில்லா
சுயநல விலைவாசியே
ஏழையின் வயிற்றில்
அடிக்க வந்த உனக்கு
கட்சி மாற்றமா?
இல்லை
ஆட்சி மாற்றம் தான்
தீர்வா என்ன?

Friday, October 19, 2012

தாஜ்மகால்

காதல் சாம்பிராஜ்ஜியத்தில்
வீற்றிருக்கும் அழகோவியம்
மும்தாஜுக்காய்....

வெள்ளித்  துர்ரலாய்
சிதறிய தேவதையின்
இமை அசையா பார்வையில்
நனைந்த சாஜஹான்..

மயிலிறகாய் வருடிச்சென்ற
காதல் ராணியின்-நினைவுகளை
அசைப்போட்டு  
ஆசை ஆசையாய்
ஆக்ராவில் கட்டிய 
நினைவுச் சின்னமோ
இந்த தாஜ்மகால்......















 

மௌனம் பேசாத போது

புன்னகைப் புதையலை
புதைகுழி உன்னில்
தொலைத்து விட்ட
குருடனாய்.
தேடி அளைந்த போது ...

மறணப்புயலில்
சிக்குண்டு
கூடிலந்த பறவையாய்
துடித்த போது,,,,

மௌன வாசலில்
மண்டியிட்ட
நேசதுரோகத்தால்
உணர்விலந்த போது...

இறக்கச்செய்யும்
இறந்தகால நினைவுகளின்
விடைதெரியாத-உன்
வார்த்தைகளுக்காய்
பரிந்துறை செய்ய
யாருமற்ற அநாதையாய்...

முகவரியற்ற முஹாரியாய்
தொடர்ந்திடும்
இதயஓலம்  இன்னும்
உன்னில் ஒலிக்காத போது,,,,

நட்பு

இதயத்தில்
அதிஸ்டவசமாய்
உதிக்கும்
நட்சத்திரம்...

மெழுகுவர்த்தி

ஏழ்மையின் விளிம்பில்
ஏக்கமான வாழ்வில்
பரிதவிக்கும் குழந்தைகளுக்காய்
குளிரையும் தாங்கி
கூடை சுமந்து
மலையேறும்  பெண்ணே...

பாதங்களை பதம்
பார்க்கும்
அட்டைகளின் அராஜகத்தை
எடுத்தெறிந்து விரையும்
பேதைப்பெண்ணே...

சாபம்

இறைவன் படைத்த
அழகிய உலகை
அறியாமையாய்
அசமந்த போக்கில்
அறியாமையாய்
குப்பை கூலங்களால்
அசுத்தப்படுத்தும் மனிதா !!
நீயோ
விளித்துக்கொள்ளாமல் இருக்க
உன்னை அழிக்க
அனுப்பிய சாபமோ-இந்ந
டெங்கு எனும் நெழும்பு …

Thursday, October 18, 2012

எழுந்திரு பெண்ணே

பெண்ணே
இது என்ன கோளமை
பெண்ணெனும் வகிபாகம்
சூட்டப்பட்டதால் தானோ
இத்தனை சுமை !

எவ்வளவு காலம்
சுமைதாங்கியாய்
பாரினில் வாழ்வது -உன்னை
பொறுமையின் சிகரமென
போற்றியிதாலா ?
வேண்டாம் பெண்ணே
வீண் புகழ்ச்ச

இதயம் பேசினால்

ஆத்மார்த்த காதலில்
இடரி விழுந்த
பெண்மையே…
பத்து மாதம்
சுமந்து
பெற்றெடுத்த
சிசுவை -தெருவில்
குப்பைத் தொட்டியில்
இட்டுவந்த இதயம்
உருத்த வில்லையா?