ஏழ்மையின் விளிம்பில்
ஏக்கமான வாழ்வில்
பரிதவிக்கும் குழந்தைகளுக்காய்
குளிரையும் தாங்கி
கூடை சுமந்து
மலையேறும் பெண்ணே...
பாதங்களை பதம்
பார்க்கும்
அட்டைகளின் அராஜகத்தை
எடுத்தெறிந்து விரையும்
பேதைப்பெண்ணே...
கொட்டும் மழையிலும்
கோடை வெயிலிலும்
கொழுந்து பறிக்கும்
குறிஞ்சிப்பெண்ணே...
சரித்திரத்தில் ஏமாற்றப்பட்ட
சதியை வெள்ளும்
சாணக்கியம் தெரியாத
பேதையாய்...
பிறந்து வளர்கையில்
உழைத்து கழைத்து-பின்
இறக்கையில் உன்னையே
எருவாய் அர்ப்பணித்து
மண்ணைப் போசிக்கும்
மானிடப்பெண்ணே..
சுயம் இல்லாமல்
பொதுநல சேவகியாய்
தன்னையே எரித்து உருகி
மற்றவரை வாழவைக்கும்
மெழுகுவர்த்தியாய்
தானேநீயும்...
ஏக்கமான வாழ்வில்
பரிதவிக்கும் குழந்தைகளுக்காய்
குளிரையும் தாங்கி
கூடை சுமந்து
மலையேறும் பெண்ணே...
பாதங்களை பதம்
பார்க்கும்
அட்டைகளின் அராஜகத்தை
எடுத்தெறிந்து விரையும்
பேதைப்பெண்ணே...
கொட்டும் மழையிலும்
கோடை வெயிலிலும்
கொழுந்து பறிக்கும்
குறிஞ்சிப்பெண்ணே...
சரித்திரத்தில் ஏமாற்றப்பட்ட
சதியை வெள்ளும்
சாணக்கியம் தெரியாத
பேதையாய்...
பிறந்து வளர்கையில்
உழைத்து கழைத்து-பின்
இறக்கையில் உன்னையே
எருவாய் அர்ப்பணித்து
மண்ணைப் போசிக்கும்
மானிடப்பெண்ணே..
சுயம் இல்லாமல்
பொதுநல சேவகியாய்
தன்னையே எரித்து உருகி
மற்றவரை வாழவைக்கும்
மெழுகுவர்த்தியாய்
தானேநீயும்...




0 comments:
Post a Comment