Pages

Subscribe:

Friday, October 26, 2012

நியாயமின்றி

மணக்க மணக்க
ருசித்து சுவைக்க
சிற்றுண்டியோ பலரகம்!!

சைவம்    என்றும்
அசைவம்என்றும்
பல வகையராக்கள் !!

சாப்பாட்டு மேசையல்
பரப்பி  வைத்த
உணவுப்பண்டமோ
கொட்டிக் கிடக்கும்
உணவுத்தட்டுகளில் !!

ஆனாலும்
தெருக்கோடியில் அமர்ந்து
ஒருவேளை உணவுக்கு
ஏங்கும்  இதயமோ
ஜயா      பிச்சை
அம்மா  பிச்சை -  என்று
கதறிக்கையேந்தி  நிற்க

அங்கே
திட்டி     அவரை
விரட்டி அடிக்க 
கைக்கொட்டி  சிரிக்கும்
மானிடமோ 
இம்மண்ணின் மேலே
உழவுகையில்  !!

உண்டு    களித்து
இன்பற்று செல்கையில்
பாதி   உண்டு
மீதி     கிடக்கும்
உணவுப்பண்டங்களை
கொட்டுகின்றனர்
குப்பைத் தொட்டியில்
மனசாட்சி இன்றி.....


0 comments: