பெண்ணே
இது என்ன கோளமை
பெண்ணெனும் வகிபாகம்
சூட்டப்பட்டதால் தானோ
இத்தனை சுமை !
எவ்வளவு காலம்
சுமைதாங்கியாய்
பாரினில் வாழ்வது -உன்னை
பொறுமையின் சிகரமென
போற்றியிதாலா ?
வேண்டாம் பெண்ணே
வீண் புகழ்ச்ச
அடிமைத்தலையில்
பூட்டி வைத்து
அடக்கியாள -ஆண்மை
தீட்டிய சதி…
ஆணினத்தின் ஆணவத்தில்
பெண்மையே
சிறைப்படுவதா?
சிந்திக்காமல் சிதைக்குல்
தடம்பதித்த
எண்ணங்களை மீண்டும்
எண்ணிப்பார் …
வீட்டுக்குல் அடைப்பட்டு
மௌனித்து பேசாமடந்தையாய்
உள்ளுக்குல் உணர்வுகளை
புதைத்து வதையாய்
சிறைப்படும் பெண்ணே,…
அடுப்பங்கரை அறுசுவைஉணவு
அந்தப்புரம் பிள்ளைகள் குடும்பம்
இவற்றுடன்
கொஞ்சம் வெளியே பார்…
எழுந்திரு பெண்ணே
பெட்டைக் கோழியாய்
அடைப்பட்டு வாழும்-நீயும்
சமூகத்தின் கண்
ஆரரிவு படைத்த உயிரி -உன்
உணர்வுகள் மதிக்கப்பட
வேண்டும்- உன் சேவைகள்
போற்றப்படவேண்டும் ..
அகிலத்தின் ஆதாரம் நீயே !!
பெண்ணே
உனக்குல் உறயப்பட்ட
உணர்வுகளுக்கு உயிரினை
கொடுக்க
எழுந்திரு பெண்ணே
பாரதி கண்ட
புதுமைப்பெண்ணே
வாழ்வினை ஒளியேற்றிட
தன்னம்பிக்கையெனும்
மூன்றாம் கையினை
பற்றிவிடு
நாளைய விடியல்
நிட்சயம்
உனக்காய் விடியும்
புதுமைப் பெண்ணே
வந்து விடு
பாரினில் புதுமைகள்
படைப்போம்
வந்துவிடு …
இது என்ன கோளமை
பெண்ணெனும் வகிபாகம்
சூட்டப்பட்டதால் தானோ
இத்தனை சுமை !
எவ்வளவு காலம்
சுமைதாங்கியாய்
பாரினில் வாழ்வது -உன்னை
பொறுமையின் சிகரமென
போற்றியிதாலா ?
வேண்டாம் பெண்ணே
வீண் புகழ்ச்ச
அடிமைத்தலையில்
பூட்டி வைத்து
அடக்கியாள -ஆண்மை
தீட்டிய சதி…
ஆணினத்தின் ஆணவத்தில்
பெண்மையே
சிறைப்படுவதா?
சிந்திக்காமல் சிதைக்குல்
தடம்பதித்த
எண்ணங்களை மீண்டும்
எண்ணிப்பார் …
வீட்டுக்குல் அடைப்பட்டு
மௌனித்து பேசாமடந்தையாய்
உள்ளுக்குல் உணர்வுகளை
புதைத்து வதையாய்
சிறைப்படும் பெண்ணே,…
அடுப்பங்கரை அறுசுவைஉணவு
அந்தப்புரம் பிள்ளைகள் குடும்பம்
இவற்றுடன்
கொஞ்சம் வெளியே பார்…
எழுந்திரு பெண்ணே
பெட்டைக் கோழியாய்
அடைப்பட்டு வாழும்-நீயும்
சமூகத்தின் கண்
ஆரரிவு படைத்த உயிரி -உன்
உணர்வுகள் மதிக்கப்பட
வேண்டும்- உன் சேவைகள்
போற்றப்படவேண்டும் ..
அகிலத்தின் ஆதாரம் நீயே !!
பெண்ணே
உனக்குல் உறயப்பட்ட
உணர்வுகளுக்கு உயிரினை
கொடுக்க
எழுந்திரு பெண்ணே
பாரதி கண்ட
புதுமைப்பெண்ணே
வாழ்வினை ஒளியேற்றிட
தன்னம்பிக்கையெனும்
மூன்றாம் கையினை
பற்றிவிடு
நாளைய விடியல்
நிட்சயம்
உனக்காய் விடியும்
புதுமைப் பெண்ணே
வந்து விடு
பாரினில் புதுமைகள்
படைப்போம்
வந்துவிடு …




0 comments:
Post a Comment